இந்த கோவில் என் முன்னோர் கட்டியது.. குஷ்புவின் ஆச்சரியமான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து இந்த கோவில் என் முன்னோர் கட்டியது என்று கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு என்பதும் தற்போது அவர் தயாரிப்பாளர் வரும் பாஜக பிரபலமாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவ்வப்போது சமூக வலைதளத்தில் சில ஆச்சரியமான கருத்துக்களை குஷ்பு பதிவு செய்து வரும் நிலையில் இருக்கும் போது கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த கோவில் தனது தாயாரின் மாமனார் கட்டியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
பிறப்பால் முஸ்லிம் ஆன குஷ்பு, சுந்தர்சியை திருமணம் செய்து கொண்ட பின்னர் மத வேறுபாடு இன்றி அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வருகிறார். மேலும் திருமணத்திற்காக மதம் மாறியதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் ’தான் மதம் மாறவில்லை என்றும் மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தான் ஒரு இந்தியன் என்றும் தைரியமாக பதிவு செய்திருந்தார். நம் நாட்டில் இருக்கும் திருமண சட்டம் குறித்து என் மீது குற்றம் சாட்டுபவர்கள் கேள்விப்பட்டதே இல்லை என்பது துரதிஷ்டமே என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள இந்து கோவிலை அவரது அம்மாவின் மாமனார் தான் கட்டினார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
In Kerala. A temple built by my ma in law's father. https://t.co/eAhQ4ZlLip pic.twitter.com/G99GSoP6Vl
— KhushbuSundar (@khushsundar) May 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com