மகனின் நடத்தைமீது கடுப்பாகிய தந்தை… நிலத்தை செல்லநாய்க்கு எழுதி வைத்த விசித்திரம்!!!

  • IndiaGlitz, [Thursday,December 31 2020]

 

மத்தியப் பிரதேசத்தில் விவாசாயி ஒருவர் தன்னுடைய செல்ல நாய்க்கு 2 ஏக்கர் நிலத்தை சொந்தமாக எழுதி வைத்து இருக்கிறார். அதோடு தன்னுடைய இறப்புக்கு பின்பு அந்த நாயை யார் கவனித்துக் கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த சொத்து சொந்தமாகும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறார். மேலும் மீதமுள்ள 18 ஏக்கர் நிலமும் இதுவரை தன்னை நன்றாக கவனித்துக் கொண்டுவந்த இரண்டாம் மனைவிக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் எனறும் தன்னுடைய உயிலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மித்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பதிவாரா பகுதியில் வசித்து வரும் விவசாயி ஓம் நாராயண் வெர்மா (50). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியான தன்வந்தி வெர்மா, கடந்த 8 வருடங்களாக இவரை விட்டு பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் மனைவி சம்பா பாய். இவரும் இவருடைய செல்ல நாய் ஜாக்கியும்தான் ஓம் நாராயணனை நன்றாக கவனித்துக்கிறார்கள். மற்றவர்கள் யாரும் இவரைக் கண்டு கொள்வதில்லையாம். இவருக்கு 5 பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அதில் ஒருவர்தான் ஆண் வாரிசு என்றும் செய்திகள் கூறுகின்றன.

அந்த ஆண்வாரிசு பொறுப்பே இல்லாமல் நடந்து கொள்வதாக ஓம் நாராயண் வருத்தப்பட்டு இருக்கிறார். இதனால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் இரண்டாம் மனைவியான சம்பா பாய்க்கும் அதோடு தன்னை இதுநாள் வரை கவனித்து வந்த நாயின் எதிர்காலத்தை கருதி செல்லப்பிராணி ஜாக்கிக்கு 2 ஏக்கர் நிலத்தையும் உயில் எழுதி வைத்து இருக்கிறார் ஓம் நாராயண். இதனால் அதிர்ந்து போன முதல் மனைவி ஊர் பெரியவர்களை அழைத்து நியாயம் கேட்டு இருக்கிறார். இந்நிலையில் கிராம பஞ்சாயத்துத் தலைவர் கூறிய அறிவுரையின்பேரில் தன்னுடைய உயிலை மாற்றி எழுதுவதாக ஓம் நாராயண் ஒப்புக் கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.