இந்தியாவில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்ட வழக்கு விசாரணை!!!
- IndiaGlitz, [Monday,October 26 2020]
இந்தியாவில் முதல் முறையாக காணொலி மூலம் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரபப்பப் பட்டது. இச்சம்பவம் குஜராம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வுகளைக் கொண்டு வந்திருக்கிறது.
ஆனாலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் நீதிமன்ற விசாரணை போன்றவை இன்றுவரை ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்று பார்வையாளர்களுக்கு நேரலை மூலம் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு இந்த வழக்கு விசாரணையை நடத்தி வரும் நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஜும் ஆப் மூலம் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற மற்ற நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணையை பொதுமக்கள் மற்றும் வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் யாரும் பார்வையிட முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் பார்வையாளர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு வழக்கின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருப்பது குறித்து பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.