வடிவேலுவை வழிக்கு கொண்டு வர ஷங்கர் செய்த அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதே வடிவேலு, சிம்புதேவன் கூட்டணியில் தயாரிக்க ஷங்கர் முடிவு செய்தார். அதன்படி லைகா மற்றும் ஷங்கர் இணைந்து தயாரிக்கும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என்ற பெயரில் படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பும் சில நாட்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் சிம்புதேவனின் திரைக்கதையில் வடிவேலு தலையிடுவதாகவும், ஒருசில காட்சிகளில் நடிக்க முடியாது என்றும், படக்குழுவினர் கொடுத்த காஸ்டியூம்களை அணிய முடியாது என்று வடிவேலு பிரச்சனை செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிம்புதேவனுக்கும் வடிவேலுவுக்கும் கருத்துவேறுபாடு முற்றவே வடிவேலு படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். இதனால் சுமார் ரூ.6 கோடி அமைக்கப்பட்ட செட் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் ஷங்கர் புகார் செய்ய, ஷங்கரின் புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருந்தபோதிலும் வடிவேலு தரப்பில் இருந்து எந்தவித ரியாக்சனும் இல்லாததால், இந்த படத்திற்காக வடிவேலுவுக்கு கொடுத்த ஒன்றரை கோடி ரூபாய் அட்வான்ஸ் மற்றும் படப்பிடிப்புக்காக செலவு செய்த செட்டின் மதிப்பு ரூ. 6 கோடி ரூபாய் மற்றும் இந்த பணத்திற்கான வட்டி ஆகியவை சேர்த்து வடிவேலு ரூ.9 கோடி கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு கெடு விதித்தது. இதன்பின்னர்தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த வடிவேலு, நடிகர் சங்க தலைவர் நாசரிடம் இனிமேல் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருவதாகவும், சிம்புதேவன் கூறியபடி நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் உறுதி கூறியுள்ளார். இந்த தகவலை நாசர், தயாரிப்பாளர் சங்கத்திடம் கூறி சமாதானம் செய்துள்ளதாகவும், இதனையடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com