சசிகலா இறந்துவிட்டதாக டுவீட் போட்ட உலகப்புகழ் பெற்ற பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோவை சசிகலா-தினகரன் ஆதரவாளர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில் உலகப்புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் சசிகலா இறந்துவிட்டதாக தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பையை வாங்கித்தந்தவரும், அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான இம்ரான்கான் சமீபத்தில் தனது டுவிட்டரில் தென்னிந்தியாவின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான சசிகலா இறந்துவிட்டதாகவும், அவரது வீட்டில் ஏகப்பட்ட நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் இது ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
இம்ரான்கானின் இந்த டுவீட்டில் உள்ள தவறை பத்திரிகையாளர் ஒருவர் சுட்டிக்காட்டி இறந்தது சசிகலா இல்லை என்றும் அவர் தற்போது பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனை வகித்து வருவதாகவும், உண்மையில் இறந்தது சசிகலாவின் தோழி ஜெயலலிதா என்றும் கூறியுள்ளார். உடனே தனது தவறை அறிந்து இம்ரான்கான் அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் அந்த டுவீட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்த பலர், 'பாகிஸ்தான் அரசியலையே அறைகுறையாக அறிந்த இம்ரான்கானுக்கு இந்திய அரசியல் குறித்த டுவீட் தேவைதானா? என்று கலாய்த்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com