'இது அன்பால சேர்ந்த கூட்டம், அழிக்க முடியாது: சிஎஸ்கே வீரரின் தமிழ் டுவீட்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துவிட்டாலே தன்னாலே தமிழ் உணர்வும், தமிழ் டுவீட்டும் வீரர்களிடையே வந்துவிடும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஹர்பஜன்சிங் உள்பட ஒருசில சிஎஸ்கே வீர்ர்கள் ஏற்கனவே தமிழில் டுவீட் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் தமிழில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இன்றிரவு நடைபெறும் போட்டியை எதிர்கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். சென்னை ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு முழு அளவில் இருக்கும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று கூறிவிட்டு பின்னர் தமிழில் 'இது அன்பால சேர்ந்த கூட்டம், அழிக்க முடியாது, எடுடா வண்டியை, போடுடா விசிலை' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இம்ரான் தாஹிர் கடந்த மார்ச் 6ஆம் தேதி 'என் இனிய தமிழ் மக்களே. வணக்கம். சிங்கார சென்னைக்கு நாளை வந்துவிடுவேன். உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்து வரும் உங்கள் அன்பு சகோதரன். வரோம், தட்றோம், தூக்கறோம். எடுடா வண்டிய, போடுடா விசில' என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

200 தொகுதிகளில் நடிகர்கள் கட்சி வெற்றி பெறும்: எஸ்.ஏ.சந்திரசேகர்

அனைத்து நடிகர்களும் ஒன்றிணைந்து ஒரு கட்சியை ஆரம்பித்தால், அந்த கட்சி உறுதியாக 200 தொகுதிகளை கைப்பற்றும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

ரன்வீர்சிங், அனுஷ்கா ஷர்மாவுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளில் குழப்பம்

பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்த ரன்வீர்சிங்கிற்கு தாதா சாகிப் பால்கே எக்ஸலன்ஸ் என்ற விருதினை தனியார் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் பாம்புகள்: வேல்முருகன் திடுக்கிடும் தகவல்

மலைவாழ் மக்கள் நூற்றுக்கணக்கான நாகப்பாம்புகளை மலையில் இருந்து பிடித்து வந்து சேப்பாக்கம் மைதானத்தில் விட திட்டமிட்டுள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கோடை மழை! வெதர்மேன் என்ன சொல்கிறார்

கோடை வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்தி கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கோடைமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷாலும் மற்றும் புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்றதில் இருந்தே பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்