குழந்தைங்களா, நாங்க அடிச்சா, அடிச்சது கடைசி வரைக்கும் மறக்காம இருக்கணும்: சிஎஸ்கே வீரரின் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி கொடுத்த 179 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் டீபிளஸ்சிஸ் ஆகிய இருவரும் 17.4 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து விட்டனர்
ஐபிஎல் வரலாற்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது அதிக ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்ற பெருமை நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கு கிடைத்தது. இதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத் அணியை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் 184 என்ற இலக்கை எட்டியதே விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்ற அதிக சேஸிங் ஸ்கோர் ஆகும். நேற்றைய வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றியை முன்னாள், இந்நாள் வீரர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். சென்னை அணி விளையாடும் நாட்களில் எல்லாம் தமிழில் டுவிட்டுகளை பதிவு செய்து வரும் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் இந்த வெற்றி குறித்து தங்களது டுவிட்டரில் கருத்துகளை பதிவு செய்தனர்
அதில் இம்ரான் தாஹிர் தனது டுவிட்டரில் கூறியதாவது ’அடிச்சது யாரு? குழந்தைகளா... நாங்க அடிச்சா, அடிச்சது கடைசி வரைக்கும் மறக்காமல் இருக்கணும். வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எடுடா வண்டியை போடுடா விசில்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்
அதேபோல் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ’சாம்பியன் சிங்கங்கள் மீண்டும் வெற்றிப்பாதைக்கு வந்துள்ளன. சிறப்பான ஆட்டம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Champions ?? are back on track??way to go @ShaneRWatson33 @faf1307 Great win boys @ChennaiIPL #whitslepodu @IPL pic.twitter.com/CzvMY6RqL2
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 4, 2020
Adichadu yaaru ? Kozhandaingala Nanga @ChennaiIPL adicha adichadu kadaisi varaikkum marakama irukanum.Vanthutomnu sollu thirumbi vanthutomnu #eduda vandiya poduda whistle
— Imran Tahir (@ImranTahirSA) October 4, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments