வீடு தேடி வரும் அத்தியாவசிய பொருட்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை போன்ற கடைகள் மதியம் 2.30 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நேற்று முதல் அமல் படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி வந்து கொடுக்கும் நடவடிக்கை பின்பற்றப்படுவதால் தமிழகத்திலும் அதேபோல் பின்பற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது

இதனை அடுத்து அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வளசரவாக்கம், ஆற்காடு ரோடு, மதுரவாயல், நெற்குன்றம், போரூர், அண்ணாசாலை உள்பட ஒரு சில பகுதிகளில் வீட்டுக்கே வந்து அத்தியாவசியமான பொருட்கள் கொடுக்கப்படும் என்றும் அதற்காக தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்