close
Choose your channels

தனுஷின் 'வாத்தி' படத்தில் திடீரென விலகிய பிரபலம்: என்ன காரணம்?

Tuesday, January 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் ‘வாத்தி’ திரைப்படத்தில் இடம் பெற்ற பிரபலம் ஒருவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் திடீரென இந்த படத்திலிருந்துதான் விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷின் ‘வாத்தி’ படத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலைக்கு மிகவும் வருந்துகிறேன் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ‘வாத்தி’ படத்திற்கு புதிய ஒளிப்பதிவாளர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரி ஆசிரியராக தனுஷ் நடித்து வரும் ‘வாத்தி’ படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment