இந்தியாவின் முக்கிய வங்கிகள் இணைப்பு!
- IndiaGlitz, [Friday,August 30 2019]
இந்தியாவின் வங்கிகள் அவ்வப்போது இணைக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் ஒருசில இந்திய வங்கிகளின் இணைப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது
இதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைட்டட் வங்கி ஆகியவை இணைக்கப்படுகிறது
அதேபோல் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. மேலும் .இந்தியன் வங்கியுடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்படுகிறது
மேலும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா பேங்க் மற்றும் கார்பரேஷன் வங்கி ஆகிய மூன்று வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்படுகிறது
வங்கிகள் இணைப்பால் கடன் வழங்கும் திறன் 2 மடங்கு அதிகரிக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் வங்கி உயர் அதிகாரிகளின் ஊதிய உயர்வை இனி நிர்வாக குழுவே முடிவு செய்யும் என்றும் வங்கி முடிவுகளை கண்காணித்து நெறிப்படுத்த வெளியில் இருந்து அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியுள்ளார்.