'வேதாளம்' படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Sunday,October 25 2015]

அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அஜீத், 'வேதாளம்' படத்தை முழுவதுமாக பார்த்ததாகவும், படத்தை பார்த்தபின்னர் அவர் இயக்குனர் சிவாவை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஃபைனல் காப்பி தயாராகிவிட்டதாகவும், அடுத்த வாரத்தில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்சார் செய்யப்பட்டவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்த படம் தயாரிப்பாளரின் வியாழக்கிழமை செண்டிமெண்ட்படி நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகுமா? அல்லதி தீபாவளி தினமான நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் 29ஆம் தேதி அதிகாலை 12.00 மணிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத்தின் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

தனுஷ் தயாரிப்பில் மீண்டும் விஜய்சேதுபதி

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளியான 'நானும் ரெளடிதான்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

'ரஜினிமுருகன்' பிரச்சனை முடிந்ததால் நிம்மதி அடைந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்திருந்தார்...

விஜய் ரசிகையாக மாறிய ஷாம்லி

கடந்த 1990ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ''அஞ்சலி'' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் நடித்த பேபி ஷாம்லி...

அஜீத் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய மர்ம நபர்கள் மீது புகார்

'வேதாளம்' படத்தின் டப்பிங்கை நேற்று அதிகாலை 4 மணி அளவில் அஜீத் முடித்துவிட்டதாக நேற்று காலை செய்திகள் வெளிவந்த நிலையில்...

'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில்?

கோலிவுட் திரையுலகில் வெற்றி தயாரிப்பாளராக இருப்பவர்களில் ஒருவர் 'அம்மா கிரியேஷன்ஸ்' சிவா என்பது அனைவரும் அறிந்ததே...