'காற்று வெளியிடை' இசை குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,January 25 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்றாலே பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படத்தின் பாடல்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது.

More News

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் திடீர் மாற்றம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு குஷ்பு உள்பட நான்கு பேர் போட்டியிட உள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

ஆந்திர முதல்வருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழக மாணவர்களின் போராட்டம்

தமிழகத்தில் மாணவர்கள் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு போராட்டம் கடைசியில் சில வன்முறையில் முடிந்தாலும் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது...

ஒரு நல்ல படத்திற்கு புரமோஷன் தேவையில்லை. நயன்தாரா

கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் அழைக்கப்படும் நயன்தாராவின் நடிப்பு குறித்து இதுவரை யாரும் தவறாக விமர்சனம் செய்ததில்லை. ஆனால் அவர் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு....

சமூகவலைத்தள 'தோழர்' டிரெண்டுக்க்கு சைலேந்திரபாபு கொடுத்த விளக்கம்

இதுவரை தோழர் என்ற வார்த்தையை கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்

திரிஷாவின் இடத்தை பிடித்த பிந்து மாதவி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொழிலதிபர் வருண்மணியனுடன் நடிகை த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் ஏற்பட்டு பின்னர் அது திருமணம் வரை செல்லாமல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.