அண்ணனுக்கு இன்னொரு பெயர் அப்பா: ராஜூவுக்கு நெகிழ்ச்சியான வரவேற்பு கொடுத்த அண்ணாச்சி!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு தனது வீட்டிற்கு வந்தபோது நெகிழ்ச்சியான வரவேற்பு கொடுத்த வீடியோவை இமான் அண்ணாச்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் இமான் அண்ணாச்சி மற்றும் ராஜு என்பது தெரிந்ததே. இருவரும் வீட்டின் உள்ளே அண்ணன் தம்பி போன்று பழகியது சக போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்தபோது மிகவும் கண்கலங்கியது ராஜூ மட்டும்தான் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற ராஜு முதலாவதாக இமான் அண்ணாச்சியின் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்தார். ராஜூ டைட்டில் வின்னர் பட்டம் வென்றதை இமான் அண்ணாச்சி தனது வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து இமான் அண்ணாச்சி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

வீட்டு பூந்தோட்டத்தில்
முளைத்த செடியிலிருந்து
கொடியின் பூக்கள் வரை
ஒன்றில் இரு வண்ணம்
அண்ணனும் தம்பியும் போல..!

அண்ணனுடன் பிறந்த
தம்பிகளுக்கு மட்டும் தான்
தெரியும் அண்ணனுக்கு
இன்னொரு பெயர்
அப்பா என்று..!