IMDB ரேட்டிங்கில் நயன்தாரா, தமன்னா, விஜய்சேதுபதியை முந்திய 'ஜெயம் ரவி' நாயகி..!

  • IndiaGlitz, [Thursday,November 30 2023]

IMDB ரேட்டிங்கில் நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதியை, ஜெயம் ரவி படத்தில் நடித்து வரும் நடிகை முந்தி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

IMDB 2023 ஆம் ஆண்டின் ரேட்டிங்கில் முதல் 10 இடங்களை பிடித்த நட்சத்திரங்களின் தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஷாருக்கான், இரண்டாவது இடத்தில் ஆலியா பட், மூன்றாவது இடத்தில் தீபிகா படுகோனே, நான்காவது இடத்தில் வாமிகா கபி ஆகியோர் உள்ளனர். இவர்களை அடுத்து தான் நயன்தாரா, தமன்னா, அக்ஷய்குமார், விஜய் சேதுபதி ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்த வாமிகா கபி, ஜெயம் ரவி நடித்து வரும் ’ஜெனி’ என்ற திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர்களும் நடித்து வருகின்றனர்,.

இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்த அர்ஜுனன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

IMDB ரேட்டிங்கில் நயன்தாரா, தமன்னாவை விட முந்தைய இடத்தில் பிடித்த பாலிவுட் நடிகை வாமிகா கபி, தமிழ் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருவதால் இந்த படம் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

ஏற்கனவே நடிகை வாமிகா கபி, செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் உருவான ’மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.