சிவகார்த்திகேயன் மீது இமான் கூறிய குற்றச்சாட்டு.. இமானின் முதல் மனைவி கூறிய திடுக் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் இமான் நேற்று யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்து கடும் குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். அவர் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும், அந்த துரோகத்தை வெளியே சொல்ல முடியாது என்றும் அந்த அளவுக்கு அது எனது மனதை காயப்படுத்தி விட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து சமூக வலைதளங்களில் இந்த பேட்டி பரபரப்பான நிலையில் இமானின் முதல் மனைவி மோனிகா இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் ’சிவகார்த்திகேயன் பெரிய துரோகம் செய்து விட்டதாக இமான் கூறியது முழுக்க முழுக்க தவறு, சிவகார்த்திகேயன் எங்கள் குடும்ப நண்பர், ரொம்ப நல்ல மனிதர், இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு, நண்பன் என்ற அடிப்படையில் எங்கள் குடும்பத்தின் மீது மிகவும் அக்கறையாக இருப்பார்.
எங்களுடைய விவாகரத்துக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை, சமாதானம் பேசி பஞ்சாயத்து பண்ணி வைக்க முயற்சி செய்தார். ஒரு குடும்பம் சிதற கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவர் எங்களுக்காக பேசினார். இமான் விவாகரத்து விவகாரத்தில் சிவகார்த்திகேயன் அவருக்கு சப்போர்ட் செய்யவில்லை என்பதால் சிவகார்த்திகேயன் மீது அவர் இந்த குற்றச்சாட்டை செலுத்தி உள்ளார்.
ஏற்கனவே இமான் தான், திருமணம் செய்ய போகும் பெண்ணை ரெடியாக வைத்துவிட்டு தான் என்னிடம் விவாகரத்து கேட்டார். நான் விவாகரத்து கொடுக்கவில்லை என்றால் உங்கள் அப்பாவை கொன்று விடுவேன் என்று மிரட்டி தான் விவாகரத்து வாங்கினார். எங்கள் குடும்பத்திற்கு நல்லது செய்ய போன சிவகார்த்திகேயன் மீது வீண் பழியை இமான் சுமத்தி உள்ளார்.
தற்போது இமானுக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லை. அதனால்தான் அவர் இது மாதிரி பிரச்சனைகளை கிளப்பி விடுகிறார். புது வாழ்க்கையில் அவருக்கு சந்தோஷம் இல்லாததால் தான் சிவகார்த்திகேயன் பெயரை தேவையில்லாமல் இழுத்து உள்ளார். எங்களுக்கு நல்லது செய்ய நினைச்சவருக்கு இப்படி ஒரு சங்கடம் ஆகிவிட்டது என்பதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்று மோனிகா கூறியுள்ளார்
இமானின் முதல் மனைவியின் இந்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout