நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர், டிரைலர், ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்துள்ள ஆக்சன் த்ரில் படமான 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தநிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 170 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நயன்தாராவின் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

'டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் மற்றும் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை . கேமியோ பிலிம்ஸ்' ஜெயக்குமாரின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ளது

More News

முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் அடிதடி

பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த அதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் மூளையை கசக்கி திரைக்கதை எழுதியும் இன்று வரை அதற்கு பலனில்லாமல் உள்ளது.

வெங்கட்பிரபுவை அடுத்து சிம்புவை இயக்கும் பிரபல இயக்குனர்

வெங்கட்பிரபுவை அடுத்து சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நானே வீதியில் இறங்கி போராடியிருப்பேன்: கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி ஆவேசம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருணாநிதி மறைவுக்கு பின் ரஜினி-ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி சென்னையில் காலமானதை அடுத்து அவரது உடல் மறுநாள் முழு அரசு மரியாதையுடன் சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நிவாரண நிதி: தமிழ் நடிகர்களின் தாராளமும், மலையாள நடிகர்களின் கஞ்சத்தனமும்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த மாநிலம் முழுவதும் வெள்ளத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் பலியாகியுள்ளதாகவும்,