close
Choose your channels

இமைக்கா நொடிகள்" ரிலீஸ் பிரச்சனை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thursday, August 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவிருந்தது. ஆனால் திடீரென இந்த படம் இன்று ஒருசில காரணங்களால் வெளியாகவில்லை. இதனால் முன்பதிவு செய்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்

இந்த நிலையில் இந்த படம் குறித்த வழக்கு ஒன்று சற்றுமுன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் "இமைக்கா நொடிகள்" திரைப்படத்தை நிபந்தனைகளுடன் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி. அளித்துள்ளது. எனவே இன்று மாலை காட்சி முதல் 'இமைக்கா நொடிகள்' படம் வெளியாகும் என தெரிகிறது.

நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை டிமாண்டி காலனி' பட இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்த படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment