நயன்தாரா படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,October 02 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'இமைக்கா நொடிகள்'. நயன்தாராவின் அதிரடி ஆக்சன் திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடல் அக்டோபர் 4ஆம் தேதி புதன்கிழமை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். கேமியோ பிலிம்ஸ்' ஜெயக்குமார் இந்த பிரம்மாண்ட கமர்ஷியல் க்ரைம் திரில்லர் படத்தை தயாரித்துள்ளார்.