'இமைக்கா நொடிகள்' படத்துடன் கனெக்சன் ஆகும்  'தர்பார்'

  • IndiaGlitz, [Monday,August 19 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தின் மும்பை படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஜெய்ப்பூரில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'தர்பார்' திரைப்படத்தில் நயன்தாரா மகளாக குழந்தை நட்சத்திரம் மானசா நடித்து வருவதாக கூறப்படுகிறது. காமெடி நடிகர் கொட்டாச்சி மகளான மானசா ஏற்கனவே 'இமைக்கா நொடிகள்' படத்திலும் நயன்தாரா மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தர்பார்' திரைப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இப்படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகவுள்ளது.