விதவிதமான அவுட் ஃபிட்களில் கலக்கும் காஜல்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டு தேனிலவிற்காக மாலத்தீவு சென்று இருந்தார். அப்போது இந்த ஜோடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகியது. இதைத் தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் மாலத்தீவுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
மாலத்தீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட காஜல் பின்னர் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். எனினும் தனது கணவருடன் அவ்வபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் ஒரு சிறிய உணவகத்தில் கணவரோடு சேர்ந்து நடிகை காஜல் அகர்வால் எடுத்துக் கொண்ட புகைப்படம் படு வைரலானது.
மேலும் புதுமணக் கொண்டாட்டத்தோடு சேர்ந்து நடிகை காஜல் அகர்வால் நடித்த வெப் சீரியல் கடந்த 12 ஆம் தேதி ஒடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகி தற்போது படு ஹிட் அடித்து வருகிறது. இந்த லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரியலை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர தற்போது தெலுங்கிலும் இயக்குநர் மாருதி இயக்கத்தில் “3 ரோசஸ்“ என்ற வெப் சீரியல் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் “இந்தியன் 2“ “பாரிஸ் பாரிஸ்” போன்ற படங்களில் நடித்து வரும் காஜல், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் “ஆச்சார்யா” எனப் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து விதவிதமான காஸ்டியூம் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பச்சை கலரில் உடை அணிந்து இவர் வெளியிட்ட அவுட் ஃபிட் புகைப்படம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com