உயிர் பயத்தில இருக்கேன்...இது வேறயா...? வீடியோ வெளியிட்டு கதறும் இளைஞர்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
"நாள் முழுக்க நானே, உயிர் பயத்தில இருக்கேன், இதுல இது வேறயா' என இளைஞர் வெளியிட்ட வீடியோ, பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க செய்கின்றது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் என்பது அதிகமாய் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது என்றே சொல்லலாம். அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைவசதிகள் இல்லாதது, மருத்துவமனை பற்றாக்குறை, தடுப்பூசிகளும் கிடைக்காமல் மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர். இதையும் தாண்டி இறந்தவர்கள் உடலை எரியூட்டுவதற்கு கூட மயானங்களில் பல மணி நேரம் சடலங்களை வைத்து, காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பலர் ஆம்புலன்ஸ்கள் கிடைக்காமல் இறந்தவர்களை பைக்கில் வைத்துச் செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
இப்படி பல கோர சம்பவங்கள் நாள்தோறும் நடக்க, மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதித்தவர்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது. அப்படிப்பட்ட சம்பவம் தான் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு சிந்த்வாரா என்ற இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது தலைக்கு மேல் இருக்கும் ஃபேன் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதை வீடியோவாக எடுத்து பதிவிட்ட அவர்,"நாள் முழுக்க உயிர் பயத்தில் உள்ளேன். இந்த ஃபேனை மாற்றுங்கள், இல்லையெனில் என்னை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறினேன். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை" என்று பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com