சொந்த குடும்பத்து பெண்களையே ஆபாச படமெடுத்த இளைஞர் கைது!

  • IndiaGlitz, [Tuesday,November 05 2019]

காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு இளைஞன் சொந்த குடும்பத்தை பெண்கள் மற்றும் உறவுக்கார பெண்களையே ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவைகளை சமூகவலைதளத்தில் பதிவேற்றிய உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பெண்களின் ஆபாச படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரத்தை அடுத்த பெரிய காஞ்சிபுரம் என்ற பகுதியை சேர்ந்த முகமது என்பவரை கண்காணித்தனர். அவரது சமூக வலைதளத்தை கண்காணித்து வந்த போது அவருக்கு சமூகவலைதளத்தில் பல போலியான அக்கவுண்ட்கள் இருப்பதும் அவைகளில் பல ஆபாச புகைப்படங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து அந்த நபரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த போலிசார் அந்த நபருக்கு அறிமுகமான ஒரு இளம்பெண்ணை செல்போன் மூலம் பேச வைத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அதன்படி அந்த நபர் அங்கு வந்தபோது மறைந்திருந்த போலீசார் முகமதுவை கைது செய்து விசாரணை செய்தனர்

இந்த விசாரணையில் தனக்கு சில ஆண்டுகளாக ஆபாச படங்களை பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும், தனக்கு தெரிந்த மற்றும் தெரியாத பெண்களை குறிப்பாக பேருந்தில் செல்லும் பள்ளி பெண்களை புகைப்படங்கள் எடுத்து அதை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்து மகிழ்வேன் என்றும் கூறினார்.

மேலும் ஒரு சில உறவினர்கள் மட்டும் குடும்பத்து பெண்களையும் இதேபோல் ஆபாசமாக மார்பிங் செய்ததாகவும் அவர் கூறியுள்ளது போலீசாரே அதிர்ச்சி அடைய செய்தது. அதன் பின்னர் அவருடைய செல்போனை ஆய்வு செய்தபோது அதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றி அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது

இதனை அடுத்து அந்த புகைப்படங்களை டெலிட் செய்ய போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக முகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

More News

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் தனுஷ்-சிம்பு பட நாயகி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் அரை டஜன் படங்களுக்கு மேலாக நடித்து கொண்டு வரும் நிலையில், அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

நடிகை மீரா மிதுன் மீது 2 பிரிவுகளில் வழக்கு 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், சமீபகாலமாக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவது தெரிந்ததே.

விஜய்சேதுபதிக்கு எதிராக போராட்டம்: 200 பேர் கைது!

நடிகர் விஜய் சேதுபதிக்கு அலுவலகத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

'தளபதி 64' தயாரிப்பில் திடீர் மாற்றம்?

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் ஒரு பக்கம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் 64வது படமான 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பிறவி மாற்றுத்திறனாளியை குணப்படுத்தும் விஜய்யின் திரைப்படங்கள்

மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத ஒருசில நோய்கள் வித்தியாசமான சில முறைகளில் குணமாகும் அதிசயமாக அவ்வப்போது உலகின் பல பகுதிகளில் நடந்து வருகிறது.