கொழுந்தனுடன் கள்ளக்காதல், தட்டிக்கேட்ட கணவருக்கு செருப்படி: அதன்பின் நடந்த விபரீதம்

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

கொழுந்தனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்த இளம்பெண் ஒருவர் தட்டிக்கேட்ட கணவனை செருப்பால் அடித்ததால் ஏற்பட்ட விபரீதம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு மரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில் பழனிக்கு திடீரென தீ விபத்து காரணமாக காயம் ஏற்பட்டது. இதனால் அண்ணனை கவனித்துக்கொள்ள அவருடைய தம்பி செந்தில் குமார் ஊரிலிருந்து வந்திருந்தார்

இந்த நிலையில் செந்தில் குமாருக்கும் மரியாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் குறித்து பழனி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறியுள்ளார். செந்தில்குமாரின் மனைவியும் தனது கணவருக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் இருவரும் தங்கள் காதலை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் மரியா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கும் மரியா-செந்தில்குமார் உறவு தொடர்ந்துதாக தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தட்டிக்கேட்க கணவர் சென்றபோது செந்தில் குமார் தனது அண்ணனை பிடித்துக்கொள்ள மனைவி மரியா அவரை செருப்பால் அடித்துள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த பழனி, மது அருந்தி முழு போதையுடன் வந்து தூங்கிக்கொண்டிருந்த செந்தில்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பழனியை தேடி வருகின்றனர்

கொழுந்தனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதோடு கணவனை செருப்பால் அடித்த சம்பவத்தால் தற்போது ஒரு கொலை நடந்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

தமிழகத்தின் அரியர் கேன்சல் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது… கிடுக்குப்பிடி காட்டும் AICTE!!!

கடந்த மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கல்லூரி  கல்வி பயின்றுவரும் மாணவர்களின் அரியர் தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

6000 கால்நடைகள், 40 பணியாளர்களுடன் நடுக்கடலில் மாயமான சரக்கு கப்பல்!!! பரபரப்பு தகவல்!!!

கிழக்கு சீனக் கடல்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி மாயமானதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

தடைகளை கடந்தது ஸ்வாதி கொலை வழக்கு திரைப்படம்: ஓடிடியில் ரிலீஸ்

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, சூளைமேடு சௌராஷ்டிரா நகரைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஸ்வாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.

மூன்று தாடிக்காரர்களின் வழி வாழும், திரையுலகை ஆளும் தாடிக்காரர்: சூரி வாழ்த்து

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் கடந்த 2007ஆம் ஆண்டு 'பொல்லாதவன்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

போதைப்பொருள் விவகார வழக்கு: இன்னொரு நடிகையும் சிக்குகிறாரா?

கன்னட திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக சமீபத்தில் கன்னட இயக்குனர் இந்திரஜித்து லங்கேஷ் அவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி