கள்ளக்காதல் கிரிமினல் குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Thursday,September 27 2018]

திருமணத்திற்கு பின்னர் மனைவி வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால் அது கிரிமினல் குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்திய தண்டனை சட்டம் 497 என்ற பிரிவின்படி வேறொருவரின் மனைவியுடன் அவரது விருப்பத்துடன் தகாத உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று உள்ளது.

இந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதி, 'தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல என்றும் 497 பிரிவு சட்டத்தின்படி தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் கூறிய நீதிபதி தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது என்றும் கூறினார்.

மேலும் மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல என்றும் ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது என்றும் இருவரும் விரும்பி உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பாலத்காரமாக கருதுவதை ஏற்க முடியாது என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.