தற்கொலைக்காக விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி, திடீரென அலறியதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,June 05 2020]

தற்கொலை செய்துகொள்வதற்காக லாட்ஜில் ரூம் போட்டு விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி திடீரென உயிர் பயம் வந்து அலறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை என்ற பகுதியை சேர்ந்த 23 வயது செல்வம் என்ற கொத்தனாருக்கும், அவரிடம் வேலை செய்யும் ஜெயா என்ற 40 வயது பெண் சித்தாளுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஜெயாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் கணவரை விட்டு அவர் பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் கடுமையாக வேலை செய்யும் இந்த கள்ளக்காதல் ஜோடி, வார இறுதியில் ஜாலியாக இருப்பதற்காக லாட்ஜில் ரூம் போட்டு தங்குவது உண்டு. இதனால் ஒரு குறிப்பிட்ட லாட்ஜில் இருவரும் வாடிக்கையாளராக மாறிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் 40 வயது பெண்ணை திருமணம் செய்ய 23 வயது செல்வத்தின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. அதேபோல் வயதுக்கு வந்த குழந்தைகள் இருக்கும்போது திருமணம் செய்ய வேண்டாம் என ஜெயாவின் உறவினர்களும் தடுத்தனர். இதனை அடுத்து மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி மீண்டும் அதே லாட்ஜில் ரூம் போட்டு தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தனர்.

ஆனால் திடீரென உயிர் பயம் வந்ததை அடுத்து அவர்கள் லாட்ஜி ஊழியர்களிடம் தாங்கள் விஷம் குடித்து விட்டோம் என்றும், எங்களை காப்பாற்றுங்கள் என்றும் கதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து லாட்ஜ் நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து கள்ளக்காதல் ஜோடியை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

தற்கொலை செய்துகொள்ள விஷம் குடித்துவிட்டு பின்னர் திடீரென உயிர் பயத்தால் இந்த கள்ளக்காதல் ஜோடி அலறியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

மின்கட்டணம் குறித்து கேள்வி எழுப்பிய பிரசன்னாவை பழிவாங்குவதா? முக ஸ்டாலின்

நடிகர் பிரசன்னா சமிபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் மின்வாரியம் குறித்து பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த

கொரோனா நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா. வின் நல்லெண்ணத் தூதராக தேர்வு!!!

மதுரை மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் இவர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

400 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்!!!

கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் தனது 400 பணியாளர்களை வெளியேற்றும் முடிவினை எடுத்து இருக்கிறது.

கணவருடன் சேரவிடாமல் தடுத்த மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகள்!

வரதட்சனை கொண்டுவா என கொடுமைப்படுத்தி மருமகளை கொலை செய்யும் காலம் மலையேறிவிட்டது என்றும், தற்போது வரதட்சணை கேட்டால் மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்யும் காலம் வந்துவிட்டது

ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது: ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை!!!

இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது போன்றவை வழங்கி சிறப்பிக்கப்படுவது வழக்கம்.