கள்ளத் தொடர்புக்கு சட்டப்படி என்ன தண்டனை தெரியுமா?
- IndiaGlitz, [Monday,November 28 2016]
ஐபிசி என்று அறியப்படும் இந்திய தண்டனை சட்டத்தில் என்ன குற்றம் செய்தாலும் அதற்குரிய தண்டனையை வகுத்துப்பட்டுள்ளது. ஆனால் சமூக அளவில் குற்றம் என்று சொல்லப்படும் கள்ளத்தொடர்பு, கள்ளக்காதல் ஆகியவற்றுக்கு எந்த தண்டனையும் இந்திய அரசியல் சட்டத்தில் இல்லை என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணம் ஆன ஒரு ஆண் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாலோ, அல்லது திருமணம் ஆன பெண் வேறொரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தாலோ என்ன தண்டனை என்பது குறித்த தகவல் எதுவுமே இந்திய தண்டனை சட்டத்தில் இல்லையாம். கள்ளத்தொடர்பு வெளியே தெரிந்தால் அதிகபட்சம் கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து செய்து கொள்ளலாம்
விவாகரத்துக்கு பின்னர் கணவனால் மனைவிக்கு எந்த வித உதவியும் தரப்பிலிருந்து கிடைக்கப் போவதில்லை என்றாலும் மனைவி ஜீவனாம்சம் கோரி வழக்குத் தொடர்ந்தால்,கணவனின் வருமானத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கை ஜீவனாம்ச தொகையாக மாதம் தோறும் மனைவிக்கு அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
சட்டப்படி கள்ளக்காதல் செய்பவர்களுக்கு தண்டனை இல்லை என்றாலும் அவர்களுக்கு குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி, தகுந்த மரியாதை கிடைக்காது. இதுவே அவர்களுக்கு பெரிய தண்டனையாக கருதப்படுகிறது.