மாமியார் செய்த மன்மத லீலை...! கள்ளக்காதலனுடன், அத்தையை வெட்டிய மருமகன்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது கள்ளக்காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்த மாமியாரை, மருமகன் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில், மூலைக்கரைபட்டி என்ற ஊரில், அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் வேலாயுதம் கூலி வேலை செய்பவர். இவரது மனைவி ராஜலட்சுமி(46). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தங்களது மகளை ஊருக்கு அருகில் உள்ள கல்லத்தி என்ற கிராமத்தில், அபிமன்யு என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் ராஜலட்சுமி, மருத்துவ பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அங்கு பணிபுரிந்துவரும் அன்பழகன்(30) என்ற இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் மருமகனுக்கு தெரியவர அவர், மாமியாரை கண்டித்துள்ளார். ஆனாலும் இதைக்கண்டுகொள்ளாமல், அவனுடன் தொடர்பில் இருந்துள்ளார் லட்சுமி. இவர்களுக்கு உள்ள கள்ளக்காதல் எல்லைமீறி, ராஜலட்சுமியின் வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
அவர்கள் வீட்டிற்கு அருகில் 2 நாட்களுக்கு முன் அபிமன்யூ சென்றுள்ளார், வீட்டிற்குள் யாரோ இருப்பதை உணர்ந்த மருமகன் உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிமன்யூ மாமியாரையும், அவளின் கள்ளக்காதலனையும் தாக்கிவிட்டு, மாமனாருக்கு போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு விரைந்து வந்து வேலாயுதம், இவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது கோபமடைந்த மருமகன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த ராஜலட்சுமி, ரத்த வெள்ளத்துடன் அங்கேயே இறந்துபோனார்.
இதன்பின் வீட்டிலிருந்து மாமனாரும், மருமகனும் தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த, பக்கத்து வீட்டினர் மூலைக்கரைப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்துவந்த போலீசார் ராஜலட்சுமியின் சடலத்தை, மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். காயங்களுடன் இருந்த அன்பழகனை மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அபிமன்யு மற்றும் வேலாயுதத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments