தனித்தனி அறையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை. செல்போன் கேமிராவில் வீடியோ பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலத்தில் கள்ளக்காதல் ஜோடி தனத்தனியாக ஒரே நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலையை இருவரும் தங்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் பேபி என்பவர் வசித்து வருகிறார். 18 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வந்த நிலையில் அதே குடியிருப்பில் இன்னொரு பிளாட்டில் வசிக்கும் புகைப்படக் கலைஞரான ரிஜோவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரும் அவரவர் பிளாட்டுக்களில் ஒரே நாளில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு முன் இருவரும் எழுதி வைத்த கடிதத்தில் தங்களுடைய முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தங்கள் தற்கொலைக்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.
இந்த இரண்டு தற்கொலைகளும் அவர்களுடைய செல்போன் கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவான வீடியோவை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com