ரசிகர்களுடன் விஜய்யின் திடீர் சந்திப்பு ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,April 28 2017]

இளையதளபதி விஜய் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஈசிஆர் சாலையில் பனையூர் என்ற பகுதியில் உள்ள 'விஜய் மக்கள் இயக்கம்' தலைமை அலுவலகத்தில் விஜய், சற்று முன்னர் தனது ரசிகர்களை சந்தித்தார். இன்றைய இந்த சந்திப்பில் விஜய், தனது ரசிகர்களுடன் போட்டோஷூட்டில் கலந்து கொண்டதாகவும், ஒருசில ரசிகர்களிடம் அன்புடன் நலம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் இன்றைய ரசிகர்கள் சந்திப்பின்போது வேஷ்டி சட்டை காஸ்ட்யூமில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை நேரில் சந்தித்து போட்டோ எடுத்து கொண்ட அவரது ரசிகர்கள் அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More News

சமந்தாவின் சிலம்பாட்ட ரகசியம் இதுதான்!

பிரபல நடிகை சமந்தா இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தா சிலம்ப பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததை பார்த்தோம்...

சமந்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கி வரும் சமந்தா இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்...

வினு சக்கரவர்த்தி மறைவிற்கு நடிகர் சங்கம் இரங்கல் செய்தி

கோலிவுட் திரையுலகில் குணசித்திர, நகைச்சுவை, வில்லன் வேடங்களை ஏற்று 1003 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் வினுசக்கரத்தி நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் சென்று இறுதி மரியாதை செலுத்தி வரும் நிலையில் நடிகர் சங்கம் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது...

டிடிவி தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் கைது. டெல்லி போலீசாரின் அடுத்த அதிரடி

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் கைப்பற்றும் நோக்கத்துடன் புரோக்கர் சுகேஷ் மூலம் ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா சமீபத்தில் கைது செய்யப்பட்டார்கள்...