இளையதளபதி விஜய்யின் மாஸ் பஞ்ச் டயலாக்குகள்

  • IndiaGlitz, [Tuesday,June 20 2017]

இளையதளபதி விஜய்யின் மாஸ் பஞ்ச் டயலாக்குகள்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக பஞ்ச் டயலாக் மிகப்பொருத்தமாக அமைந்த நடிகர் விஜய் தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும். அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை நெருங்கிவிட்ட விஜய்க்கு ஒவ்வொரு படத்திலும் படத்தின் கதைக்கும், ஏற்று நடிக்கும் கேரக்டர்களுக்கும் பொருத்தமான பஞ்ச் டயலாக்காக அமைந்து வருவதால் விஜய்யின் பஞ்ச் டயலாக் காலத்தை வென்று ரசிகர்களின் மனதை தொட்டுள்ளது. விஜய் பேசிய ஒவ்வொரு பஞ்ச் டயலாக்கும் இளையதலைமுறையினர்களின் ரிங்டோனாக இருப்பதை வைத்தே அவருடைய பஞ்ச் டயலாக் எந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் இந்த கட்டுரையில் விஜய் பேசிய ஒருசில ஹிட்டான பஞ்ச் டயலாக் குறித்து பார்ப்போம்

பைரவா

தெரிஞ்ச எதிரியைவிட தெரியாத எதிரிக்குத்தான் அல்லு அதிகமா இருக்கணும், இன்னிக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒண்ணு என்கிட்ட இருக்குது. சொன்ன சொல்லை காப்பாத்துறது...இந்த இரண்டு பஞ்ச் டயலாக்குகளையும் சிறுவர் முதல் இளைஞர்கள் வரை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

துப்பாக்கி:

ஐ யாம் வெயிட்டிங். மூன்றே மூன்று வார்த்தை பஞ்ச் டயலாக் ஒன்று மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியது என்றால் அது இந்த பஞ்ச் டயாலாக் தான். தலையை லேசாக அசைத்து விஜய் இந்த பஞ்ச் டயலாக்கை சொல்லும் ஸ்டைலே தனிதான். இதே டயலாக்கை இந்தி ரீமேக்கில் அக்சயகுமார் நன்றாக பேசியிருந்தாலும் விஜய் அளவுக்கு இல்லை என்று தான் பெரும்பாலான விமர்சனங்கள் வெளிவந்தன

தெறி:

நீ வில்லத்தனம் செய்யணும்ன்னா உனக்கு நாலு அடியாள் வேணும் ரெண்டு அல்லக்கை வேணும், ஆனா எனக்கு அப்படியில்லை நான் சிங்கிளாவே வந்து உன் சிங்கியை தட்டிட்டு போய்க்கிட்டே இருப்பேன். பழம்பெரும் இயக்குனர் மகேந்திரனுக்கு முன்னால் வசனம் பேசுவதே மிகப்பெரிய விஷயமாக கருதப்படும் நிலையில் இந்த பஞ்ச் டயலாக்கை விஜய் அசால்ல்ட்டாக பேசும் அழகே தனிதான். விஜய்யின் சிறந்த பஞ்ச் டயலாக்குகளில் இதுவும் ஒன்று

கத்தி :

அரிசி, பருப்பு, காய்கறி கொத்தமல்லி கருவேப்பிலை வரைக்கும் கிராமத்தில் இருந்து வரணும், ஆனா ஒரு கிராமத்தான் செத்தான்னா மூக்கை மூடிக்குவாங்களா! பஞ்ச் டயலாக்கில் சமூக அவலங்களையும் உறைக்கும் வகையிலும் கூற முடியும் என்பதை நிரூபித்த வசனம் தான். இந்த படமும் சரி, இந்த படத்தில் அவ்வப்போது இடம்பெற்ற பஞ்ச டயலாக்குகளும் சரி ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.

திருப்பாச்சி:

பொறுக்கிங்கள அழிக்க நீங்க நினைச்சா முடியும். நினைக்க மாட்டீங்க....ஆனா இந்த கிரி நினைச்சிட்டான்..முடிச்சிருவாண்டா....அனேகமாக விஜய் அதிக அளவில் பஞ்ச் வசனம் பேசிய படம் இதுவாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் இந்த படத்தின் அனைத்து பஞ்ச் டயலாக்குகளும் மாஸ் என்றால் இந்த பஞ்ச் டயலாக் மாஸிலும் மாஸ்

கில்லி:

இந்த ஏரியா அந்த ஏரியா அந்த இடம்..இந்த இடம்..எங்கேயுமே எனக்கு பயம் கிடையாதுடா...ஏன்னா ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா.... விஜய் நடித்த மிகப்பெரிய ஹிட் படம் இதுதான். இந்த படம் இன்றுகூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் படம் முழுவதையும் அசையாமல் பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உண்டு. ஒவ்வொரு காட்சியிலும் விறுவிறுப்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கலவையே இந்த படம்

வேலாயுதம்:

நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன். நீ வேற காட்டு காட்டுன்னு சொல்றே. காட்டாம இருந்தா நல்லா இருக்குமா? பொதுவாக மோகன்ராஜா இயக்கிய படங்களில் பஞ்ச் டயலாக் இருக்காது. ஆனால் விஜய்க்காக 'வேலாயுதம்' படத்தில் இடம்பெற்ற இந்த பஞ்ச் டயலாக், இளைஞர்களை மிகவும் கவர்ந்த வசனங்களில் ஒன்று

போக்கிரி:

நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்...இந்த பஞ்ச் டயலாக் இன்று கூட இளைஞர்களின் டிரெண்டில் உள்ளது. இதே படத்தில் இடம்பெற்ற இன்னொரு பஞ்ச் டயலாக்கான ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்ற பஞ்ச் டயலாக் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

திருமலை:

எங்களுக்கு நண்பன்னா தோள்ல்ல கைபோடவும் தெரியும், எதிரின்னா தோலை உரிக்கவும் தெரியும்'. விஜய் நடித்த முதல் ஆக்சன் படம் இதுதான் என்று கூறலாம். இந்த படம் வெற்றி பெற்றதால் தான் அடுத்தடுத்து விஜய் ஆக்சன் படங்களில் நடித்தார். இந்த படத்தில் விஜய் பேசிய பல பஞ்ச் டயலாக்குகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதே படத்தில் இடம்பெற்ற இன்னொரு பஞ்ச் டயலாக் 'வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறாவன் ஜெயிப்பான்' என்ற வசனமும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

பகவதி:

ஆண்டவன் கொடுக்குறத யாராலும் தடுக்க முடியாது, ஆண்டவன் தடுக்குறதை யாராலும் கொடுக்க முடியாது..விஜய் பேசிய மாஸ் பஞ்ச் டயலாக்குகளில் இதுவும் ஒன்று. ரஜினி பஞ்ச் டயலாக் பாணியில் இருந்தாலும் விஜய் ரசிகர்கள் மிகவும் ரசித்த பஞ்ச் டயலாக்குகளில் இதுவும் ஒன்று

நண்பன்:

ஆல் இஸ் வெல். எவ்வளவு இறுக்கமான சூழ்நிலையில் இருந்தாலும் பாசிட்டிவ் எண்ணம் ஏற்பட இந்த மூன்று வார்த்தைகளை கூறினால் போதும். இந்த வசனம் ஒரு பஞ்ச் டயலாக் மட்டுமின்றி சிறந்த தன்னம்பிக்கைக்கு உரிய வசனமாகவும் அனைத்து தரப்பினாலும் கருதப்படுகிறது.

குருவி: :

நம்ம பேச்சு மட்டும்தான் சைலண்டா இருக்கும். ஆனால் அடி சரவெடிதான். தரணி இயக்கத்தில் வெளியான 'குருவி' படத்தின் இந்த வசனம் விஜய் ரசிகர்களை மிகவும் கவர்ந்த மேலும் ஒரு பஞ்ச் டயலாக் ஆகும். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இதில் இடம்பெற்ற பஞ்ச் டயலாக்குகள் மாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

புலி:

பாசத்துக்கு முன்னாடிதான் நான் பனி, பகைக்கு முன்னாடி நான் புலி. இந்த படத்தின் டிரைலரிலேயே இடம்பெற்றிருந்த இந்த வசனம், படம் வெளியாகும் வரை இணையதளங்களில் ஹிட்டாகி கொண்டே இருந்தது. ஏற்ற இறக்கங்களுடன் விஜய் பேசிய இந்த வசனம், இந்த படத்தின் பாசிட்டிவ்களில் ஒன்று
விஜய் பேசிய பஞ்ச் டயலாக்குகளை வரிசைப்படுத்தி கொண்டே போனால் அதற்கு எல்லையே இருக்காது. இருப்பினும் இளையதளபதியின் இனிய இந்த பிறந்த நாளில் அவருடைய ஒருசில ஹிட்டான பஞ்ச் வசனங்களை விஜய் ரசிகர்களுக்காக இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம்.

More News

சட்டசபையில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ திடீர் வெளிநடப்பு

பிரபல நகைச்சுவை நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் அதிமுகவின் சசிகலா அணிக்கு முழு ஆதரவு தந்து கொண்டிருந்த நிலையில் இன்று முதலமைச்சரின் பதில் ஒன்றுக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சபையில் இருந்து வெளியேறினார்...

மோகன்லால் படத்துடன் கனெக்சன் ஆன அஜித்தின் 'விவேகம்'

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதையும் இந்த படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமை மிகப்பெரிய தொகைக்கு வியாபாரன் ஆனதாக வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்...

சி.வி.குமாரின் 'மாயவன்' சென்சார் தகவல்கள்

'அட்டக்கத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராகி இயக்கிய முதல் படம் 'மாயவன்'. த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராக உள்ளது...

சிறந்த இயக்குனர் விருதினை பெறுகிறார் தனுஷ்

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்த தனுஷ் சமீபத்தில் இயக்குனராகி இயக்கிய படம் 'ப.பாண்டி...

விஜய் ரசிகர்களுக்கு அட்வான்ஸ் இன்ப அதிர்ச்சி: அதிகாரபூர்வ தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:Â