'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்
தளபதி விஜய் நடித்த 'மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் முதல்முறையாக நித்யாமேனனும், இரண்டாவது முறையாக சமந்தாவும், மூன்றாவது முறையாக காஜல் அகர்வாலும் இணைந்து நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜய்யுடன் வடிவேலு இணைந்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பியுள்ளார். விஜய்-வடிவேலு படங்கள் இதுவரை நகைச்சுவையில் சோடை போனது கிடையாது. அந்த வகையில் 'மெர்சல்' திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த கட்டுரையில் விஜய்-வடிவேலு நடித்த படங்கள் குறித்து பார்ப்போம்
ப்ரெண்ட்ஸ்:
விஜய், சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி என பெரும் நட்சத்திர கூட்டம் இந்த படத்தில் நடித்திருந்தாலும் இன்றுவரை ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசிப்பது இந்த படத்தில் உள்ள வடிவேலு காமெடி காட்சிகள் தான். பெயிண்ட் காண்ட்ராக்டர் கேரக்டரில் வடிவேலும், அவரிடம் வேலை பார்க்கும் அப்ரசெண்டிகளாக விஜய், சூர்யாவும் நடித்திருப்பார்கள். வடிவேலு முகத்தில் கரி பூசுவது, கடிகாரம் உடைப்பது, சுவரில் உள்ள ஆணிகள் புடுங்குவது, உள்பட பல காமெடி காட்சிகள் இந்த படத்தில் ரசிகர்களை விடாமல் சிரிகக் வைத்தன
பகவதி:
மிகவும் சீரியஸான இந்த படத்தில் ரசிகர்கள் ரிலாக்ஸ் ஆவது விஜய்-வடிவேலு காமெடி காட்சிகளில் தான். டீக்கடை ஓனராக விஜய்யும் அவரிடம் வேலை செய்பவராக வடிவேலும் நடித்து காமெடியில் கலக்கியிருப்பார்கள். குறிப்பாக விஜய்யின் சைக்கிளை வடிவேலு கேலி செய்வது, வடிவேலுவின் சொந்த ஊர் உறவுக்காரர்கள் விஜய் கடையில் சாப்பிடுவது போன்ற காட்சிகள் ஞாபகத்தில் வைத்து கொள்ளக்கூடிய காட்சிகள் ஆகும்
வசீகரா:
இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இன்று வரை தொலைக்காட்சிகளில் இந்த படத்தின் விஜய்-வடிவேலு காட்சிகளை ரசிக்க தவறுவதில்லை. ஆரம்பத்தில் விஜய்க்கு வடிவேலு கொடுக்கும் டார்ச்சர்கள், பின்னர் வடிவேலுவை விஜய் ஓட்டும் காட்சிகள் மறக்க முடியாதவை
சச்சின்:
விஜய்-வடிவேலு காம்பினேஷன் காமெடியில் வெற்றி பெற்ற இன்னொரு படம் தான் இது. இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்திருந்த இந்த படத்தில் ஜெனிலியாவுடன் மோதும் ஒவ்வொரு முறையும் விஜய்க்கு பதிலாக வடிவேலு பல்பு வாங்கும் காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பினை பெற்றது.
போக்கிரி:
சூப்பர் ஹிட் வெற்றி படமான இந்த படமும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் பிரபலம். மண்டையில் இருந்த கொண்டையை மறந்துட்டேனே என்று அப்பாவியாய் வடிவேலு கூறும் காட்சி, வடை போச்சே போன்ற காட்சிகள் இன்று மனதில் நினைத்தாலும் சிரிப்பு வரும்
மதுர:
விஜய்யுடன் வடிவேலு காமெடியில் கலக்கிய மற்றொரு படம். குறிப்பாக விஜய் வடிவேலுவிடம் 'உளுந்த வடையில் மட்டும் ஏன் ஓட்டை போட்றாங்க' என்று மப்பில் கலாட்டா செய்யும் காட்சிகள் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சிகள் ஆகும். அதேபோல் விஜய் கழுத்தில் பாம்பை போட்டு கொண்டு செய்யும் கலாட்டா பல திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் சிரிப்பை அடக்க முடியாத காட்சிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
வில்லு:
வடிவேலு தலையில் கூம்பு போன்ற வடிவத்தை விஜய் ஒரு காட்சியில் ஆக்குவதும், அதே தோற்றத்தில் படம் முழுவதும் வடிவேலும் வரும் காட்சிகள் சிரிப்பை அடக்க முடியாத காட்சிகள். அதேபோல் விஜய் குளித்துவிட்டு வரும்போது நயன்தாரா மின்சார ஷாக்கால் துடிக்க அவரை காப்பாற்றவரும் விஜய்க்கு நயன்தாராவும், வடிவேலுவும் மாறி மாறி முத்தம் கொடுக்கும் காட்சியும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் ஆகும்.
சுறா:
விஜய்யின் தோல்விப்படங்களில் ஒன்றாக இந்த படம் அமைந்தாலும் இந்த படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் மனதில் நிற்கும் காட்சிகளாக உள்ளன
காவலன்:
விஜய்-வடிவேலு வெற்றி காமெடி கூட்டணி இணணந்து நடித்த படங்களில் இதுவும் ஒன்று. 'பாடிகாட் விஜய்க்கு உதவியாளராக வடிவேலு நடித்திருக்கும் இந்த படத்தில் அயர்ன்பாக்ஸ் காமெடி காட்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்ப் வரும்
மெர்சல்:
காவலன் படத்திற்கு பின்னர் சுமார் 6 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் - வடிவேலு கூட்டணி நடிக்கும் படம் தான் 'மெர்சல்'. இந்த படத்திலும் விஜய்-வடிவேலு காமெடி காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாகவும், நகைச்சுவை ரசிகர்களுக்கு இந்த படத்தின் காமெடி காட்சிகள் ஒரு விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்சிவாஜிக்கு ஒரு தங்கவேலுவை போல, எம்ஜிஆருக்கு ஒரு நாகேஷை போல, ரஜினிக்கு ஒரு கவுண்டமணி-செந்தில் போல், கமல்ஹாசனுக்கு ஒரு கிரேசி மோகன் போல் விஜய்க்கு கிடைத்த ஒரு சிறப்பான நகைச்சுவை கூட்டணி வடிவேலு. இந்த விஜய்-வடிவேலு கூட்டணி மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.