இளையதளபதியின் அன்புக்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது ரசிகர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு இணையாக விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் 'தெறி' வில்லனும் பிரபல இயக்குனருமான மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் மகேந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் விஜய் மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பும், பதிலுக்கு ரசிகர்கள் மீது விஜய் வைத்திருந்த அன்புக்கும் ஒரு உதாரணத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இவர் விஜய் நடித்த 'சச்சின்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் 'சச்சின்' படப்பிடிப்பை முடித்துவிட்டு மறுநாள் சென்னைக்கு கிளம்ப இருந்த நிலையில் இரவு ஒருமணி வரை விஜய்யிடம் பேசிக்கொண்டிருந்ததாகவும் அதன் பின்னர் தனது அறையில் படுத்து அசந்து தூங்கி கொண்டிருந்ததாகவும் அந்த நேரத்தில் ஹோட்டல் மேனேஜர் காலிங் பெல்லை அடித்து விஜய்யை பார்க்க தீவிர ரசிகை ஒருவர் வந்திருப்பதாக தகவல் கூறினாராம்.
இந்த நேரத்தில் விஜய்யை எப்படி எழுப்ப முடியும் என்று தான் மறுத்ததாகவும், ஆனால் வந்திருக்கும் ரசிகை உடல்நிலை சரியில்லாதவர் என்றும் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விஜய்யை பார்க்க மருத்துவமனையில் இருந்து நேராக வந்திருப்பதாகவும் கூறினார்.
கீழே இறங்கி வந்து பார்த்தபோது இளம்பெண் ரசிகை ஒருவர் கையில் டிரிப்ஸ் ஏறும் சிரின்ஜ் உடன் நின்றிருக்க அவரது தோழி சலைன் பாட்டிலை பிடித்துக்கொண்டிருக்கும் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக ஜான் மகேந்திரன் தெரிவித்தார்.
பின்னர் சிறிய தயக்கத்துடன் விஜய்யை எழுப்பி விபரத்தை சொல்ல கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே கிழே வந்து அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, அந்த பெண்ணை பத்திரமாக வழியனுப்பி வைத்ததாகவும் கூறினார்.
உயிரையும் பொருட்படுத்தாமல் விஜய்யை பார்க்க விரும்பும் ரசிகர்கள் விஜய்க்கு மட்டுமே உள்ளனர் என்பதும், ரசிகர்களுக்காக எந்த நேரத்திலும் எழுந்து வர தயாராக உள்ள ஒரே நடிகர் விஜய் மட்டுமே என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout