'தெறி' படத்தின் சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Sunday,April 03 2016]

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' படம் சமீபத்தில் சென்சார் செய்வதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது என்பதையும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் சென்சார் நடைபெறும் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் நேற்று 'தெறி' படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு "U" சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். 'தெறி' படம் "U" சர்டிபிகேட் பெற்றுள்ளதால் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்பட படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இந்நிலையில் 'தெறி' திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுவிட்டதை அடுத்து இந்த படம் ஏப்ரல் 14-ல் வெளியாவது உறுதியாகியுள்ளது. சென்சாரில் ' "U" சர்டிபிகேட்டை இந்த படம் பெற்றாலும், தற்போது தமிழகத்தில் தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் இருப்பதால் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை தற்போது இந்த படத்திற்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.