20% மக்கள் செய்த தவறுக்காக 80% பாதிக்கப்படுவது என்ன நியாயம்? : விஜய்

  • IndiaGlitz, [Tuesday,November 15 2016]

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அதிரடியாக அறிவித்த பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்தும் பலர் கருத்து கூறி வரும் நிலையில் இளையதளபதி விஜய் சற்றுமுன் இதுகுறித்து தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு உண்மையில் மிக துணிச்சலான முடிவு. நம்முடைய நாட்டிற்கு தேவையான, வரவேற்கத்தக்க முடிவு. நம் நாட்டின் பொருளாதாரத்தை இந்த நடவடிக்கை நிச்சயம் வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நோக்கம் பெரியதாக இருக்கும்போது அதற்கான பாதிப்பு சிறிது இருக்கத்தான் செய்யும். அதே நேரத்தில் அந்த பாதிப்புகள் நோக்கத்தை விட அதிகமாகிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்
அதே சமயத்தில் அன்றாட தேவைகளான சாப்பாடு, மருந்து பொருட்கள் வாங்குதல், வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பாமல் இருக்கும் நிலை, வியாபாரிகள் ஆகியோர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திருக்க வேண்டும்.
பேத்தியின் திருமணத்திற்கு நிலத்தை விற்ற ஒரு வயதான பெண், தன்னிடம் உள்ள ரூபாய்கள் செல்லாது என்று கேள்விப்பட்டவுடன் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றது, சிகிச்சைக்காக சென்ற குழந்தை ஒன்று ரூபாய் நோட்டு செல்லாது என்ற காரணத்தால் சிகிச்சை மறுக்கப்பட்டு இறந்து போன சம்பவம் ஆகிய சம்பவங்கள் எனது மனதை பாதித்தது. இதுமாதிரி விஷயங்களை தவிர்த்திருக்கலாம்
நாட்டில் 20% பணக்காரர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் செய்த தவறுக்காக மீதியுள்ள 80% மக்கள் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்.
நான் திரும்ப திரும்ப கூறும் ஒரு விஷயம் என்னவெனில் இதுவரை யாரும் செய்யாத, யோசிக்க கூட இல்லாத விஷயத்தை செய்தது இந்த அரசின் சாதனைதான் இது. இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற முக்கிய அறிவிப்பு வெளியிடும் முன் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே யோசித்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து
இன்று ஓரளவுக்கு நிலைமை சீரடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருந்தாலும் இன்னும் கிராம பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை விரைவில் தீர்க்க அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

More News

சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு விஷாலின் அதிரடி பதில்

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்டதாக வெளிவந்த தகவலை அடுத்து விஷால் சற்று முன் வடபழநியில் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தார்.

'கபாலி' கணக்கை காட்ட முடியுமா? ரஜினிக்கு அமீர் கேள்வி

பிரதமர் மோடியின் கருப்புப்பண நடவடிக்கைக்கு முதல் ஆளாக ஆதரவு குரல் கொடுத்த ரஜினி அவர்கள் 'கபாலி' கணக்கை காட்ட முடியுமா? என்று பிரபல இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்யின் 'பைரவா' படப்பிடிப்பு குறித்த முக்கிய செய்தி

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின் அவர் நடித்து வந்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது.

தர்மதுரை படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் தமிழகத்தில் 75 நாட்களுக்கும்....

விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு

கடந்த சில நாட்களாகவே தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுக்கு கருத்துவேறுபாடு...