இளையதளபதியுடன் இணைந்த பிரபல நடிகையின் மகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, இந்தி என முக்கிய மொழிகளில் இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இதுகுறித்த எவ்வித பதட்டமும் இன்றி விஜய் தன்னுடைய அடுத்த படமான 'விஜய் 59' படத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், 'ராஜா ராணி' படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.
விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தில் இயக்குனர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், பிரபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன என்பதை அறிவோம். விஜய்யின் மகள் கேரக்டரில் நடிக்க பல குழந்தைகள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இறுதியில் பிரபல நடிகை மீனாவின் மகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல பேட்டிகளில் மீனா தன்னை மிகவும் கவர்ந்த நடிகை என்று விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 'ஷாஜஹான்' படத்தில் விஜய்யுடன் 'சரக்கு வச்சிருக்கேன்' என்ற பாடலில் மீனா நடனம் ஆடியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com