விஜய், ரஜினி, மீண்டும் விஜய். தாணுவின் புதிய கணக்கு

  • IndiaGlitz, [Thursday,July 21 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற படத்தை தயாரித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணு அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' என்ற பிரமாண்டமான படத்தை தயாரித்து நாளை வெளியிடவுள்ளார். தெறி ஏற்கனவே பிளாக்பஸ்டர் ஹிட் என்பது தெரிந்ததே. அதேபோல் 'கபாலி'யும் வசூலில் வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'கபாலி' படத்தை அடுத்து மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை தாணு தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தாத செய்திகள் கோலிவுட்டில் வலம் வருகின்றன.
'கபாலி' பரபரப்பு முடிந்தவுடன் இதுகுறித்த தகவல் கலைப்புலி எஸ்.தாணுவிடம் இருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால் மீண்டும் 'தெறி' போன்ற அதிரடி படம் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.

More News

கபாலி': முதல் நாள் மற்றும் வார இறுதியில் எதிர்பார்க்கப்படும் உத்தேச வசூல்

நாளை சூரியன் உதிக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் முதல் காட்சி முடிந்திருக்கும்.

சிம்புவின் 'AAA'வில் எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய் பட நடிகர்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'தல 57' படத்தில் வில்லனா? சசிகுமார் விளக்கம்

அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படப்பிடிப்பிற்கு தேவையான ஆயத்த பணிகளை படக்குழுவினர் விறுவிறுப்புடன் செய்து வருகின்றனர்.

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்..அது ரஜினி மட்டுமே. பிரபல இயக்குனர் கருத்து

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்று ஒருசில ஊடகங்களும், ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கும்...

'கபாலி': அமெரிக்க பிரிமியர் காட்சியில் ரஜினிக்கு ஆரவார வரவேற்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பிரிமியர் ஸ்பெஷல் காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது...