இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் விஜய்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி 2' ஆகிய படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில் இந்த இரண்டு படங்களின் பட்ஜெட்டை விட பெரிய பட்ஜெட்டில் அதாவது சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராவதால் மிகப்பெரிய ஹீரோ ஒருவரை படக்குழு ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்து மறுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் இளையதளபதி விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் விஜய்-சுந்தர் சி இணையும் பிரமாண்டமான இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனனத்து தரப்பினர்களுக்கும் ஒரு விஷுவல் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments