'பைரவா' படத்தின் இன்னொரு பாடல் வரிகள் இதோ
Saturday, November 5, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படத்தின் 'பட்டையக் கெளப்பு, குட்டையக் குழப்பு' பாடல் வரிகளை சமீபத்தில் கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் தற்போது இன்னொரு மெலடி பாடலின் வரிகள் தற்போது வெளிவந்துள்ளது. அழகிய காதல் மெலடி பாடலான இந்த பாடலையும் வைரமுத்து அவர்களே எழுதியுள்ளார். இதுகுறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது:
ஒரு திருமண மண்டபத்தில் முதல் முதலாய் கீர்த்தி சுரேஷைப் பார்க்கிறார் நாயகன் விஜய். அவர் ஊர் தெரியாது; பேர் தெரியாது. ஆனால் அந்த அழகில் மனம் சொக்கிப் போகிறது. பசுவின் பின்னால் போகும் கன்றுபோல் கீர்த்தி சுரேஷின் பின்னால் விஜய் அலைந்து அலைந்து பாடும் பாடல் இது. கவிதையின் சாயல் கொண்ட இந்தப் பாடலைக் கவிதைபோல் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் பரதனைக் கேட்டுக்கொண்டேன். பாடல் படமாக்கப்பட்டதும் என் வீட்டுக்கே வந்து போட்டுக்காட்டினார் இயக்குநர் பரதன். இது கேமராவில் எழுதிய கவிதை` என்று அவரைப் பாராட்டினேன். இசை வரும் முன்னே; தமிழ் வரும் பின்னே. இதோ லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அந்த வரிகளை வாசிக்க வழங்குகிறேன். இசையோடு கேட்க இன்னும் சில வாரங்கள் காத்திருங்கள்...”
மஞ்சள் மேகம் - ஒரு
மஞ்சள் மேகம் - சிறு
பெண்ணாகி முன்னே போகும்
பதறும் உடலும் - என்
கதறும் உயிரும் - அவள்
பேர்கேட்டுப் பின்னே போகும்
செல்லப் பூவே - நான்
உன்னைக் கண்டேன்
சில்லுச் சில்லாய் - உயிர்
சிதறக் கண்டேன்
நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன
கனவா கனவா - நான்
காண்பது கனவா - என்
கண்முன்னே கடவுள் துகளா
காற்றின் உடலா - கம்பன்
கவிதை மடலா - இவள்
தென்னாட்டின் நான்காம் கடலா
சிலிக்கான் சிலையோ
சிறுவாய் மலரோ
வெள்ளை நதியோ
வெளியூர் நிலவோ
நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன
செம்பொன் சிலையோ - இவள்
ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ - இவள்
பெண்பால் வெயிலோ
நான் உன்னைப் போன்ற
பெண்ணைக் கண்டதில்லை
என் உயிரில் பாதி
யாரும் கொன்றதில்லை
முன்னழகால் முட்டி
மோட்சம் கொடு - இல்லை
பின் முடியால்
என்னைத் தூக்கிலிடு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments