இளையதளபதியின் 'பைரவா'வில் இருந்து தொடங்கும் 2017 புத்தாண்டு

  • IndiaGlitz, [Friday,December 30 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படத்தின் டிரைலர் குறித்து செய்தி வெளியிடும் ஒருசில ஊடகங்கள் வரும் புத்தாண்டு தினத்தில் டிரைலர் வெளியாக வாய்ப்பே இல்லை என்று செய்தி வெளியிடுகிறது. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அதே ஊடகம் 'பைரவா' டிரைலர் புத்தாண்டு வெளியாகிறது என்று செய்தி வெளியிட்டு விஜய் ரசிகர்களை குழப்பி வருகின்றன.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே 'பைரவா' திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் புத்தாண்டு தினத்தில் டிரைலர் வெளியாகும் என்றும் மிகச்சரியாக கணித்து கூறியது நமது ஊடகமே என்று கூறி கொள்வதில் பெருமை அடைகிறோம்.

நாம் சரியாக கணித்தபடி 'பைரவா' படத்தின் டிரைலர் வரும் நாளை மறுநாள் அதாவது புத்தாண்டு தொடங்கும் முதல் நொடியில் அதிகாலை 12.00 மணிக்கு வெளிவருகிறது. இந்த படத்தின் டிரைலர் சென்சார் முடிந்துவிட்டதாகவும், டிரைலரின் ரன்னிங் டைம் 2 நிமிடங்கள் 6 வினாடிகள் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளன. ஆக்ரோஷமான ஆக்சன் காட்சிகளும், இறுதியில் பிரஸ் மீட் டயலாக்குகளும் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பைரவா படத்தின் டீசரில் இருந்து தொடங்கும் இந்த புத்தாண்டை விஜய் ரசிகர்கள் சிறப்புடன் கொண்டாட நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

More News

அனிருத்தின் முதல் திகில் படத்தின் சென்சார் விபரங்கள்

தனுஷின் 'விஐபி' படத்தில் அவருடைய தம்பியாக நடித்திருந்த ரிஷிகேஷ் ஹீரோவாக நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'ரம்'...

பிரபுதேவாவை சந்தித்து மனம்விட்டு பேசினாரா நயன்தாரா?

விஜய் நடித்த 'வில்லு' படத்தில் பிரபுதேவா-நயன்தாரா ஜோடி நட்பாகி, அந்த நட்பு படம் முடியும்போது காதலாக மாறியது.

'பைரவா' டிரைலர் தேதி குறித்த பரதனின் டுவீட்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ்...

அதிமுகவின் இந்த தீர்மானங்கள் சாத்தியமா?

இன்று காலை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மறைந்த தமிழக முதல்வர் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாட வலியுறுத்தி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது...

பொதுச்செயலாளர் பதவியை ஏற்க சம்மதம். முதல்வருடன் ஜெ. நினைவிடம் செல்கிறார் சசிகலா

இன்று காலை அதிமுக பொதுக்குழு கூடி ஒருமனதாக அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் சசிகலா என்று தீர்மானம் நிறைவேற்றியது...