தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு டபுள் விருந்து

  • IndiaGlitz, [Monday,April 10 2017]

இளையதளபதி விஜய் தற்போது 'தளபதி 61' படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் செம விருந்து ஒன்று காத்திருக்கின்றது. விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'தெறி' திரைப்படம் வெளியாகி ஒருவருடம் நிறைவடைவதை முன்னிட்டு சென்னை உள்பட பல நகரங்களில் 'தெறி' திரைப்படம் சிறப்பு காட்சி திரையிடப்படவுள்ளது.

அதேபோல் அதே தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான 'பைரவா' திரைப்படம் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகின்றது. எனவே அன்றைய தினம் விஜய் நடித்த 'தெறி' மற்றும் 'பைரவா' படம் இரண்டையும் பார்க்க வாய்ப்புள்ளதால் விஜய் ரசிகர்களுக்கு டபுள் விருந்தாக கருதப்படுகிறது.