'கில்லி 2' ஸ்கிரிப்ட் ரெடி. விஜய்க்காக காத்திருக்கும் தரணி

  • IndiaGlitz, [Thursday,April 20 2017]

விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தேடித்தந்த திரைப்படம் 'கில்லி'. இந்த படம் வெளிவந்து 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் ரசிகர்கள் இந்த படத்தை இன்னும் மறக்கவில்லை என்பது கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று விஜய் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கேள்வி கேட்டு வருகின்றனர். இயக்குனர் தரணியும் பல பேட்டிகளில் 'கில்லி 2' குறித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து தரணி கூறியபோது, 'கில்லி 2' ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. விஜய் எப்போது ஓகே சொன்னாலும் நான் இயக்க தயாராக இருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

மீண்டும் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், தரணி, ஆகியோர் இணையும் கூட்டணி சாத்தியமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தல'யுடன் மீண்டும் கைகோர்க்கும் விஜய்-நயன்தாரா

ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் அடுத்த ஆண்டு முதல் களமிறங்கவுள்ளது என்றும் இந்த அணியில் தல தோனியை இணைக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்படும் என்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் சீனிவாசன் கூறியதை ஏற்கனவே பார்த்தோம்.

ஓபிஎஸ் முன் நிற்கும் நிலை வந்தால் செத்துருவேன். நாஞ்சில் சம்பத்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணியை ஆதரித்த நாஞ்சில் சம்பத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சமூக வலைத்தள பயனாளிகளிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தொடங்கிவிட்டது 'விஸ்வரூபம் 2' பணிகள். கமல் ரசிகர்கள் குஷி

உலக நாயகன் கமல்ஹாசனின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று 'விஸ்வரூபம்'. தடைகள் பல தாண்டி கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இந்த படம் உலக அளவில் வசூலை குவித்து ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது...

ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தமிழ் இயக்குனர்

'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கெளரவ் நாராயணன் தற்போது உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

விவாகரத்தான நடிகையுடன் ஜோடியாக சுற்றும் இளம் நடிகர்

பிரபல நடிகரும், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவி மகனுமான அர்ஜூன் கபூர், கடந்த சில நாட்களாக பிரபல நடிகை மலாய்க்கா அரோராவுடன் லிவிங் ரிலேஷனில் இருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தொடர்பு காரணமாக போனிகபூர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.