இசைஞானியுடன் இணைவாரா இமான்?

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

1000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து உலக சாதனை செய்துள்ள இசைஞானி இளையராஜா, இளையதலைமுறை இசையமைப்பாளர்களுக்கு ஒரு மானசீக குரு என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு இசையமைப்பாளரும் இசைஞானியை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பதை ஒரு கனவாக வைத்திருப்பது உண்டு.

அந்த வகையில் வளர்ந்து வரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வரும் டி.இமான், சமீபத்தில் தனது இசையில் வெளியான '10 எண்றதுக்குள்ள' படத்திம் ஆல்பம் சூப்பர் ஹிட் ஆன சந்தோஷத்தில் இருக்கும் நிலையில் மேலும் ஒரு சந்தோஷ நிகழ்ச்சியாக சமீபத்தில் அவர் இசைஞானியை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, 'இசைஞானியுடன் மரியாதை நிமித்த சந்திப்பு நடந்தது. அவருடைய ஆசி எனக்கு கிடைத்தது உண்மையிலேயே பெரிய விஷயம்' என்று கூறியதோடு, இசைஞானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மெலடி இசைக்கு பெயர்போன டி.இமான் இசைஞானியுடன் இணைந்து ஒரு பாடலிலோ அல்லது ஒரு படத்திலோ பணிபுரிவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.