close
Choose your channels

பிரியதர்ஷன் படத்தின் இசையமைப்பாளர் யார்? புதிய தகவல்

Thursday, October 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோபுர வாசலிலே', காஞ்சிவரம்' போன்ற தமிழ் படங்களையும் ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களையும் இயக்கிய இயக்குனர் பிரியதர்ஷன் தற்போது இயக்கி வரும் தமிழ்ப்படம் 'சில சமயங்களில்'. எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த திரைப்படமான இந்த படத்தில் அசோக்செல்வன், ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நடிகை அமலாபால் மற்றும் பிரகாஷ்ராஜ் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது. முதலில் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி, இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

இசைஞானிக்கு இயக்குனர் பிரியதர்ஷன் முழுபடத்தையும் போட்டு காட்டியதாகவும், இந்த படத்தில் ரொம்பவே இம்ப்ரஸ் ஆன இளையராஜா, உடனே இந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்க ஒப்புக்கொண்டதாகவும் மேலும் இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment