சாதாரண பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம். இளையராஜா வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நேற்று கர்நாடக மாநில கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்ப பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டு பிரசாத பொருட்களை விமானத்திற்கு எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இளையராஜாவுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் உயரதிகாரிகளால் சமரசம் செய்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை ஒருசில ஊடகங்களும், ஒருசில அரசியல்வாதிகளும் பெரிதாக்கி வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் இளையராஜா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.
'பெங்களூர் விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தை நான் பெரிதாக எடுக்கவில்லை. பாதுகாவலர்கள் அவர் கடமையைதான் செய்தனர். ஒருவகையில் இப்படி கடமையாற்றும் பாதுகாவலர்கள் இல்லை என்றால் இந்தியாவே கிடையாது. இது ஒன்றுமே இல்லாத விஷயம். இதுபோன்ற தேவையற்ற விஷயத்தில் நமது நாட்டு மக்கள் தங்கள் கவனத்தையும், சக்தியையும் விரயம் செய்வது கவலையளிக்கிறது' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com