ஜெயலலிதாவுக்கு இசைஞானியின் இசையஞ்சலி

  • IndiaGlitz, [Thursday,December 08 2016]

தமிழக முதல்வராக இருந்து தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மறைந்த முதல்வருக்கு இசைஞானி இளையராஜா தனது இசையஞ்சலியை செய்துள்ளார். இந்த சோக கீதத்தை அவரே இயற்றி, இசையமைத்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த பாடலின் சோக வரிகள்:
" வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா,
தாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா .,"
யாவும் இந்த மண்ணில் நிரந்தரமா, இருந்திடும்மா
நெஞ்சம் பதறுது, கதறுதம்மா., பிள்ளைகளை பாரம்மா
உன் சேவைகள் மறைந்திடுமா., உன்னை போலே யாரம்மா?
தாலாட்டு பாடாமல் தாயானாய் அம்மா
தாய் உன்னை காணாமல் நோயானோம் அம்மா
தாய் இல்லா பிள்ளைக்கும் நீதானே அம்மா
தவிக்கின்றோம் நீ மீண்டும் வர வேண்டும் அம்மா
பாரெங்கும் உன் புகழ் வீசுதேம்மா
பார் உந்தன் பிள்ளைகள் துடிப்பதை அம்மா
ஆறுகள் கண்களில் வழியுதே அம்மா
அநாதையாய் ஆனது நாங்கள் தான் அம்மா
ஆறுதல் இன்றியே போனதே அம்மா, அம்மா., - வானே இடிந்.,