ஆஸ்திரேலியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு விருது
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய், ஷாலினி அஜித் நடித்த 'காதலுக்கு மரியாதை' படத்தில் Love And Love Only' என்ற புத்தகம் இடம்பெறும் காட்சியை யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் இந்த தலைப்பில் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழரான ஜூலியன் கரிகாலன் என்பவர் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
பஞ்சாபி இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் படித்து கொண்டே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் பணிபுர்கிறார். அப்போது அங்கே வேலை பார்க்கும் ஆஸ்திரேலிய இளம்பெண் மீது காதல் கொள்கிறார். ஆனால் திருமணம் என்று வரும்போது இருநாட்டு கலாச்சாரம் தடுக்கின்றது. இதன் முடிவு என்ன என்பதுதான் Love And Love Only' படத்தின் கதை.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மூன்று பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். இந்த படத்தின் சிறந்த இசைக்காக ஆஸ்திரேலியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த இயக்குநருக்கான் விருது ஜூலியன் கரிகாலனுக்கும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout