close
Choose your channels

நிறைமாத கர்ப்பிணியான இலியானா.. டெலிவரி எப்போது?

Wednesday, July 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் ’டெலிவரி எப்போது’ என்ற கேள்வி எழுப்பியுள்ளதோடு, சுகப்பிரசவமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான இலியானா அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக மாறினார். விஜய் நடித்த ’நண்பன்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த அவர் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

திருமணம் ஆகாத இலியானா கர்ப்பத்துக்கு காரணம் யார் என்பது தெரியவில்லை. இருப்பினும் சமீபத்தில் அவர் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

கர்ப்பமாக இருப்பது ஒரு அழகான அழகான பாக்கியம்... இதை அனுபவிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி என்று நான் நினைக்கவில்லை, எனவே இந்த பயணத்தில் நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன். நமக்குள் வளரும் ஒரு வாழ்க்கையை உணர்வது எவ்வளவு இனிமையானது என்பதை என்னால் விவரிக்க முடியாது. பெரும்பாலான நாட்களில் நான் என் கர்ப்பமான வயிற்றை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். மேலும் நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், நான் இந்த குழந்தையை மிகவும் நேசிக்கிறேன், இப்போதைக்கு அது போதும் என்று நினைக்கிறேன்’ என்று பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’மை லிட்டில்’ என்று கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து எப்போது டெலிவரி? சுகப்பிரசவமாக வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment