நிறைமாத கர்ப்பிணியான இலியானா.. டெலிவரி எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,July 26 2023]

நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் ’டெலிவரி எப்போது’ என்ற கேள்வி எழுப்பியுள்ளதோடு, சுகப்பிரசவமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான இலியானா அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக மாறினார். விஜய் நடித்த ’நண்பன்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த அவர் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

திருமணம் ஆகாத இலியானா கர்ப்பத்துக்கு காரணம் யார் என்பது தெரியவில்லை. இருப்பினும் சமீபத்தில் அவர் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

கர்ப்பமாக இருப்பது ஒரு அழகான அழகான பாக்கியம்... இதை அனுபவிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி என்று நான் நினைக்கவில்லை, எனவே இந்த பயணத்தில் நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன். நமக்குள் வளரும் ஒரு வாழ்க்கையை உணர்வது எவ்வளவு இனிமையானது என்பதை என்னால் விவரிக்க முடியாது. பெரும்பாலான நாட்களில் நான் என் கர்ப்பமான வயிற்றை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். மேலும் நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், நான் இந்த குழந்தையை மிகவும் நேசிக்கிறேன், இப்போதைக்கு அது போதும் என்று நினைக்கிறேன்’ என்று பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’மை லிட்டில்’ என்று கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து எப்போது டெலிவரி? சுகப்பிரசவமாக வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

'கேப்டன் மில்லர்' டீசர் ரிலீஸ் ஆகும் நேரம்.. ஜிவி பிரகாஷ் வெளியிட்ட முக்கிய தகவல்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

காதலனுக்காக ரூ.5 கோடிக்கு சூனியம்? அலுவலகத்தில் திருடி வசமாக சிக்கிய இளம்பெண்…!

சீனாவில் வசித்துவரும் இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலருடன் வலுவான உறவை மேம்படுத்துவதற்காகவும் இருவருக்கும் இடையே உள்ள சிக்கலை தீர்ப்பதற்காகவும் பிளாக் மேஜிக் எனப்படும் சூனியத்தை நம்பியுள்ளார்

'தூங்காவனம்' இயக்குனரின் அடுத்த படத்தில் மணிரத்னம் பட நாயகி.. 2 மொழிகளில் உருவாகிறதா?

கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் மணிரத்னம் படத்தில் நடித்த நடிகை முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்

இந்தியாவில் மட்டுமல்ல.. சிங்கப்பூர், ஜப்பானிலும் 'காவாலா' ஜுரம்.. தமன்னாவின் வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அட்லியுடன் செம்ம ரொமான்ஸ்.. க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா அட்லி..!

இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி, சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்று முன் தனது கணவருடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த