திருமணமும் ஆகவில்லை, கர்ப்பமும் இல்லை: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Friday,November 16 2018]

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த 'நண்பன்' படம் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையுமான இலியானாவுக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருக்கும் திருமணமாகிவிட்டதாகவும், தற்போது இலியானா கர்ப்பமாக இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக வதந்திகள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலியானா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 20 வயதில் நடிக்க வந்து தொடர்ந்து 12 ஆண்டுகளாக சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகவும், தனக்கு இன்னும் திருமணமும் நடக்கவில்லை, தான் கர்ப்பமாகவும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதற்குமேல் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தெலுங்கு, இந்தி படங்களில் இன்னும் பிசியாக இருக்கும் நடிகை இலியானா நடித்த 'அமர் அக்பர் அந்தோணி' என்ற தெலுங்கு படம் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.