கர்ப்பத்திற்கு காரணமானவரின் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா.. ஆனால்..!

  • IndiaGlitz, [Saturday,June 10 2023]

நடிகை இலியானா சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் திருமணம் ஆகாத அவரின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற ரசிகர்களின் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நடிகை இலியானா ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த புகைப்படத்தில் இலியானாவின் ஆண் நண்பரின் முகம் தெளிவாக தெரியாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இலியானா அதன் பிறகு ’நண்பன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார். இந்த நிலையில் இலியானா ஒரு சில பிரபலங்களுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டாலும் தனது காதலரை இதுவரை அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இலியானா அவ்வப்போது கர்ப்பத்துடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் சற்று மங்கலாக தன்னுடைய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கர்ப்பமாக இருப்பது ஒரு அழகான அழகான பாக்கியம்... இதை அனுபவிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி என்று நான் நினைக்கவில்லை, எனவே இந்த பயணத்தில் நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன். நமக்குள் வளரும் ஒரு வாழ்க்கையை உணர்வது எவ்வளவு இனிமையானது என்பதை என்னால் விவரிக்க முடியாது. பெரும்பாலான நாட்களில் நான் என் கர்ப்பமான வயிற்றை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்

மேலும் நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், நான் இந்த குழந்தையை மிகவும் நேசிக்கிறேன், இப்போதைக்கு அது போதும் என்று நினைக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

நடராஜன் கிரிக்கெட் மைதான திறப்பு விழா: பிரபல தமிழ் நடிகர் பங்கேற்பு..!

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ள நிலையில் இந்த மைதானத்தின் திறப்பு விழாவில் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கலந்து கொள்ள

அந்த கிரீடத்தை அடிச்சிடோம்னா, பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்: 'தூக்குதுரை' டீசர்..!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன என்பதையும்

உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்… காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மனைவி!

திருமணமாகி ஓராண்டுகளைக் கடந்த பின்பும் தனது கணவன் உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்கிறார், விவாகரத்துக்கு முயற்சித்தாலும் அதற்கும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார்

நடிகை - அமைச்சர் ரோஜாவுக்கு என்ன ஆச்சு? சென்னை அப்பலோவில் அனுமதி..!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவரும் தற்போது ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருப்பவருமான ரோஜா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

'வாடிவாசலுக்கு முன் ஒரு சூர்யா படம்.. இயக்குனர் யாராக இருக்கும்?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து